இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மோடி பேசிய போது ,மீண்டும் வரலாறு மீண்டும் படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் இருந்து என் பயணத்தை தொடங்கியது போல ‘நமஸ்தே ட்ரம்ப்பில் இருந்து அவரின் பயணத்தை தொடங்கியுள்ளார். உலகின் பெரிய ஜனநாயக நாடு உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களை வரவேற்பதில் ஒட்டுமொத்த நாடும் உற்சாகம் அடைந்துள்ளது.
நமஸ்தே ட்ரம்ப் என்ற பெயருக்கு ஆழமான பொருள் இருக்கின்றது. ‘நமஸ்தே’ என்ற வார்த்தை உலகின் பழமையான மொழியான சமஸ்கித வார்த்தையாகும். மனிதர்களுக்கு மட்டும் மரியாதை செலுத்தாமல் அதனோடு தொடர்புடைய தெய்வீகத்தன்மைக்கும் மரியாதை செலுத்துவதற்கு தான் ‘நமஸ்தே’ என்ற பொருள் என விளக்கினார் மோடி.
இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே நெருங்கிய உறவு இருக்கின்றது. சுதந்திரத்தைப் போதிக்கும் நாடாக அமெரிக்காவும் , உலகம் ஒரு குடும்பம் என்பதை இந்தியாவும் போதிக்கின்றது. அமெரிக்காவுக்கு பெருமையான சுதந்திர தேவியின் சிலையை போல , இந்தியாவின் ஒற்றுமைக்கான சிலையாக சர்தார் வல்லபாய் படேலின் சிலை உள்ளது என்று மோடி குறிப்பிட்டார்.