Categories
பல்சுவை

உலகிலேயே மிக நீளமான மேம்பாலம்….. இது எங்க இருக்கு தெரியுமா?…. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

சீனாவின் சுகாய் நகரத்தையும், ஹாங்காங் நகரத்தையும் இணைப்பதற்கு கட்டப்பட்டிருக்கும் பாலமே உலகின் மிக நீளமான பாலம் என்று பெயரை பெற்றுள்ளது. கிரேட்டர் வளைகுடா திட்டத்தின் முக்கிய அம்சமாக இந்த திட்டம் பார்க்கப்படுகின்றது. சீனா மற்றும் ஹாங்காங் இடையேயான போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 9 ஆண்டுகால கடின உழைப்பால் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டது.

இதற்கு முன்பாக தைவான் நாட்டில் அதிவேக ரயில் திட்டத்திற்கு கட்டப்பட்ட பாலமே உலகின் மிகப்பெரிய பாலமாக இருந்தது. தற்போது சீனா ஹாங்காங் இடையே 55 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் மிகப்பெரிய பாலமாக உள்ளது. இந்த பாலம் மூலமாக 6 கோடியே 50 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் .இதன் மூலமாக 11 பெருநகரங்கள் வளர்ச்சியடையும் என அறிவிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்க அபாயம் பூகம்பத்தை தாங்கும் அளவிற்கு வலுவான கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்று பல யுக்திகளை யோசித்து பாலம் கட்டப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8 வரை ஏற்படும் நிலநடுக்கங்களை தாங்கும் விதத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் இருந்து செல்வதற்கான பயண நேரம் இப்பாலத்தின் வருகையின் காரணமாக 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துள்ளது.

Categories

Tech |