Categories
பல்சுவை

உலகிலேயே சிறந்தது இதுதான்…. கம்ப்யூட்டரை வென்ற சிறுமி…. எப்படி தெரியுமா….?

நம்முடைய கையெழுத்து அழகாக இருந்தால் ஆசிரியர்களையும் வெகுவாக கவர்ந்து விடலாம். நாம் சிறு வயதில் இருந்தே அழகாக எழுத வேண்டும் என்று முயற்சி செய்திருப்போம். பள்ளி படிக்கும் காலங்களிலும் சரி கல்லூரி காலங்களிலும் சரி கையெழுத்துக்கு தனி மதிப்பு உள்ளது. உங்கள் கையெழுத்து அழகாக இருந்தால் வழக்கத்தை விட அதிக மதிப்பெண் கிடைக்கும். ஒருவருடைய கையெழுத்து அவரின் தலையெழுத்தையே மாற்றி விடும் என்று நாம் பலமுறை கேட்டிருப்போம்.

அப்படி உலகிலேயே மிக அழகிய கையெழுத்தை கொண்ட நேபாள திரும்பி பற்றி உங்களுக்கு தெரியுமா?.அந்த சிறுமியின் கையெழுத்து கம்ப்யூட்டர் எழுத்தையே மிஞ்சி விட்டதாம். நேபாளத்தை சேர்ந்த பிரக்ரிதி மாலா என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி உலகிலேயே மிக அழகான கையெழுத்து சொந்தக்காரி என்ற பெருமையை அடைந்துள்ளார். அவரின் கையெழுத்தை பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

நேபாளத்தில் உள்ள பிரபல பள்ளியான சைனிக் அவசியா மகா வித்யாலயா பள்ளியில் இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றார். அவரின் கையெழுத்து மைக்ரோசாஃப்ட் வேர்டை காட்டிலும் அழகாக இருக்கும். கணிப்பொறியிலிருந்து பிரின்ட் எடுத்தது போல், எழுத்துக்கள் நேராகவும் எழுத்துக்களுக்கு இடையேயான இடைவெளி சீராகவும் இருக்கும். அவர் தனது கையெழுத்திட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். உலகிலேயே இதுதான் மிகவும் அழகான கையெழுத்தாம்.

Categories

Tech |