உலக அளவில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை உடைய நாடுகள் பட்டியலில் ஜப்பான் மற்றும்சிங்கப்பூர் தொடர்ந்து முதலாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஒருநாட்டு மக்கள் தங்களது பாஸ்போர்ட்டைக் கொண்டு விசா இன்றி எத்தனை நாடுகளுக்குச் செல்ல முடியும் என்பது போன்ற சில விடயங்களின்படி சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்னும் விடயம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் Henley Passport Index சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
ஜப்பான் மற்றும் சிங்கப்பூரின்பாஸ்போர்டுடன் 192நாடுகளுக்கு விசாஇன்றியே போகலாம் என்பதால், அந்த 2 நாடுகளுமே பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 190 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என்பதால் ஜெர்மனி மற்றும் தென்கொரியா 2-வது இடத்தில் இருக்கின்றன. இதையடுத்து 3-வது இடத்தைப் பகிர்ந்துகொள்பவை பின்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் ஆகும். அந்நாடுகளின் பாஸ்போர்ட்டுடன் விசா இன்றியே 189 நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.
அதன்பின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த பிரித்தானியா 5-வது இடத்திற்கு முன்னேற அமெரிக்கா 6-வது இடத்தில் இருக்கிறது. இப்பட்டியலில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் ரஷ்யா-உக்ரைனை ஊடுருவியதற்குப் பிறகு உக்ரைன் 34-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் ரஷ்யாவோ 46-வது இடத்தில் இருந்து 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. அது இன்னமும் கீழ் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து இருப்பது ஆப்கானிஸ்தான் ஆகும். அத்துடன் இலங்கை 103-வது இடத்தில் இருக்கிறது.