Categories
உலக செய்திகள்

உலகிற்கே மெர்சல்…! “கொரோனவை வச்சு செஞ்ச நாடு” … WHOவே பாராட்டி அசத்தல் …!!

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட கனடா நாட்டினை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

கனடா உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொரோனாவுக்கு எதிராக போராட எடுத்த முயற்சிகள் அனைத்தும் பாராட்டப்பட வேண்டிய விஷம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கனடாவின் “எம்பயர் கிளப்பில்”உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக ottawa அளித்துள்ள 440 மில்லியன் நன்கொடையை குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் இந்தக் கொரோனா நோய் பல நாடுகள் ஒன்றாக இணைந்து ஒரே நோக்கத்திற்காக போராடுவதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. ஆனால் கனடாவினர் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

இந்த கொரோனா காலத்தில் கனடா இந்த கொள்ளைநோயை பெரும் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, அதை எப்படி எதிர்கொள்வது என்பதை மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக  அமைந்துள்ளது. மேலும் சில நாடுகளில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை விட எல்லா நாடுகளிலும் உள்ள சிலருக்காவது தடுப்பூசி போடுவது தான் சிறந்த வழி. அதே நேரத்தில் தற்போது தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்கும் ஒரு வழி ஆகிவிடாது. சமூக இடைவெளி, காற்றோட்டம் நிறைந்த அறை, முகக் கவசம் அணிதல் போன்ற அன்றாட சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |