சினிமா பாணியில் ஒருவர் வங்கியை கொள்ளை அடித்துள்ளார். அதாவது கடந்த 1995-ம் ஆண்டு மெக் ஆர்த்தர் வீலர் என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே இருக்கும் 2 வங்கிகளை கொள்ளை அடித்துள்ளார். இந்த வங்கிகளில் கொள்ளை அடிக்கும் போது அவர் முகமூடி கூட அணியவில்லை. அதற்கு பதிலாக எலுமிச்சைப் பழச்சாறை பயன்படுத்தி கொள்ளை அடித்துள்ளார். அதாவது எலுமிச்சைப் பழச்சாறை பயன்படுத்தி invisible ink தயாரிப்பார்கள். இதனால் எலுமிச்சை பழச்சாறை தன்னுடைய முகத்தில் பூசினால் தன்னுடைய முகமும் மறைந்துவிடும் என மெக் ஆர்த்தர் நினைத்துள்ளார். எனவே எலுமிச்சை பழச்சாறை தன்னுடைய முகத்தில் பூசிவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார்.
இவர் வங்கியில் இருந்தவர்களிடம் என்னுடைய முகம் உங்களுக்கு தெரியாது. ஆனால் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தான் எனக் கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளை அடித்துள்ளார். ஆனால் அவருடைய முகத்தை வங்கியில் இருந்தவர்கள் அனைவரும் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி சிசிடிவி கேமராவில் மெக் ஆர்த்தரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதை வைத்து அவர் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் காவலர்கள் மெக் ஆர்த்தரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் இது உலகின் முதல் முட்டாள்தனமான கொள்ளை சம்பவமாக கருதப்படுகிறது.