உலகத்தில் மிகவும் ஆபத்தான மற்றும் தாக்கும் தன்மை கொண்ட விலங்குகள் என்றால் சிங்கம், புலி போன்ற விலங்குகள் தான் நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வரும். ஆனால் அது தவறு. இந்த உலகத்தில் அதிவேகமாக தாக்கக்கூடிய மற்றும் ஆபத்தான உயிரினம் என்றால் அது நாம் சாப்பிடக்கூடிய இறால் தான். ஏனெனில் இறால் மீன்கள் தங்களுடைய இறையை துப்பாக்கியில் இருந்து வெளியே வரும் குண்டை விட பல மடங்கு வேகமாக சென்று தாக்கும்.
இந்நிலையில் நாம் கண்களை எவ்வளவு நேரத்தில் இமைப்போம் என்று நமக்கே தெரியாது. ஆனால் நாம் கண்களை இமைக்கும் நேரத்தை விட 50 மடங்கு அதிகமான நேரத்தில் இறால் மீன்கள் அதனுடைய இறையை தாக்கும். மேலும் சாதாரணமான ஒரு இறால் மீன் அதிவேகமான வேகத்தில் தன்னுடைய இறையை தாக்குகிறது என்று நினைக்கும் போது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.