இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட இங்கிலாந்து படையின் கேப்டன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இங்கிலாந்து படையின் கேப்டன் டாம் மூர்(100) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் தனியாக நிதி திரட்டி கொரோனா முன்கள சுகாதார பணியாளர்களுக்கு 53 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கினார். இவரது மறைவுக்கு இங்கிலாந்து ராணி மற்றும் பிரதமர் உட்பட உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.