உலகிலே சக்தி வாய்ந்த தலைவர் ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் தனி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கினார். இந்தியாவின் பாரம்பரிய நடனம் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்தை கண்டு ரசித்தார்.
அதைத்தொடர்ந்து உலகிலே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் மொடீரா மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த ட்ரம்ப்புக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
அதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் அமைக்கப்பட்ட குண்டு துளைக்காத மேடையில் ஏறிய அதிபர் ட்ரம்ப், மெலனியா, பிரதமர் மோடி ஆகியோருக்கு அங்கிருந்தவர்கள் வரவேற்று முழக்கம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து இரு நாட்டு தேசிய கீதங்களும் அங்கு ஒலிக்கப்பட்டடு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது.