உலகின் மாசடைந்த ஆறுகளை பற்றிய ஆய்வு ஒன்றை யோர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் மிக மாசடைந்த ஆறுகளை பற்றி யோர்க் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி சர்வதேச அளவிலான 258 ஆறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். அதில் 1052 மாதிரிகள் எடுத்து கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் பாகிஸ்தானில் உள்ள ராகி ஆற்றில் லிட்டர் ஒன்றில் 189 மைக்ரோ கிராம் அளவுக்கு கழிவு பொருட்கள் கலந்துள்ளது தெரியவந்தது.
அதில் பெரும் அளவில் பரசிட்டாமல், நிக்கோட்டின், கோபின் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை கலந்துள்ளன. புலவர்கள் மற்றும் ஓவியர்களால் வர்ணிக்கப்பட்ட ராவி ஆறு தற்போது மனிதர்கள் மற்றும் ஆலை கழிவுகளால் சாக்கடை போல் மாற்றம் அடைந்துள்ளது. என தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தவிர்த்து பாகிஸ்தானில் உள்ள சிறிய மற்றும் பெரிய நீர் நிலைகளும் இதுபோன்ற நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.