Categories
உலக செய்திகள்

உலகின் பழமையான ஜீன்ஸ்… பெரும் தொகைக்கு விற்பனை… எவ்வளவு தெரியுமா…??

1985 -ஆம் வருடம் பனாமாவிலிருந்து நியூயார்க்கை நோக்கி தங்ககப்பல் என அழைக்கப்பட்ட எஸ்.எஸ் மத்திய அமெரிக்க கப்பல் 425 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி வடக்கு கரோலினா பகுதியில் நீரில் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் மெக்சிகோ அமெரிக்க போரில் ஓரிகானை சேர்ந்த ஜான் டிமெண்ட் என்பவருக்கு சொந்தமான டிரங்கு  ஒன்றிலிருந்து சமீபத்தில் உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸ் ஜோடி ஆரம்ப காலத்தில் ஜோடி பேண்ட் லெவிஸ் ஸ்ட்ராஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து பட்டன் ஃப்ளையுடன் கூடிய வெள்ளை, கனரக  சுரங்க தொழிலாளியின் ஜீன்ஸ் பேண்ட் கடந்த வாரம் சுமார் 114,000 அமெரிக்க டாலருக்கு நெவாடாவில் உள்ள ரெனோவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் துணியின் அசல் நிறம் தெரியவில்லை. மேலும் தற்போதைய புகைப்படத்தில் தெரியும் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்கள் அதன் பிற உள்ளடக்கங்களில் இருந்து பிரிந்த கறைகள் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |