ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலை QS நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் QS வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதில் சென்னை பல்கலை 48-வது இடத்திலும், 47- வது இடத்திலேயே ஐஐடி ரூர்கியும், 37- வது இடத்தில் ஐஐடி கௌஹாத்தியும் உள்ளன. கல்வி மதிப்பீடு, ஊழியர்கள் மதிப்பீடு, பேராசிரியர் மற்றும் மாணவர் விகிதம், ஆராய்ச்சி வெளியீடுகள், சர்வதேச பேராசிரியர்கள் விகிதம், சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.
Categories
உலகின் டாப் 50-ல் இடம்பிடித்த சென்னை பல்கலை.,…. வெளியான தரவரிசை பட்டியல்….!!!!
