பால்வீதி மண்டலத்தில் உள்ள சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதறி வருவதை ஜப்பானின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏகே டிராகோனிஸ் என பெயரிட்டுள்ளார் அந்த நட்சத்திரத்தை பூமியிலிருந்தும் விண்வெளியில் இருந்தும் தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர் . ஆராய்ச்சியின் முடிவில் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்பது நமது சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்களின் மேற்பரப்பில் நிகழ கூடிய வெடிப்பு நிகழ்வு ஆகும்.
இந்த வெடிப்புகளின் காரணமாக வெளியாகும் பிளாஸ்மா அல்லது வெப்பமான துகள்கள் ஒரு மணி நேரத்திற்கு பில்லியன் கணக்கான மைல்கள் வேகத்தில் விண்வெளியில் பயணிக்கும். இது நம் பூமியின் மீது மோதினால் மனித இனத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். பூமியை சுற்றி வரும் செயற்கை கோள்கள் கருகிவிடும். மேலும் இதன் காரணமாக பூமியில் தொலைத்தொடர்பு, மின்சார சப்ளை நிறுத்தம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். இது பல ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் நிகழும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும் இதுபோன்ற சம்பவம் 1859, 1921, 1989 ஆகிய ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது .