உலகம் பனிப்போரை விட மிகவும் மோசமான சூடான மோதலின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ கூறியுள்ளார்.
2 ஆம் உலகப் போர் முடிந்த பின்னர் கடந்த 1991 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமிடையே நடந்த மோதலும், முறுக்களும் பனிப்போர் ஆகும். இந்நிலையில் ஐ.நா சபையின் பொது செயலாளரிடம் பத்திரிகையாளர்கள் “உலகம் 2 ஆம் பனிப்போரின் விழும்பில் இருக்கிறதா”? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அதற்கு அவர் “உலகம் பனிப்போரை விட மிகவும் மோசமான சூடான மோதலின் விளிம்பில் உள்ளதாக” கூறியுள்ளார். மேலும் அவர் சூடான மோதல் என்று கூறுவதைவிட உலகம் ஒரு “புதுவகையான வெதுவெதுப்பான மோதலில்” இருப்பதாக தெரிவித்துள்ளார்.