நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், விக்ரம், சிம்பு என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். சமீபத்தில் திரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். நேற்று திரிஷாவின் பிறந்தநாளுக்கு (மே 4) அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
— Trish (@trishtrashers) May 5, 2021
இந்நிலையில் நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘உலகம் சந்தித்திருக்கும் இந்த கொடுமையான நேரத்தில் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் இந்த கடினமான காலகட்டத்தில் உங்கள் நேரங்களை எனக்காக ஒதுக்கி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி . நான் நலமாக இருக்கிறேன். உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியதும் இணைந்து கொண்டாடுவோம். உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது .