ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘கேஜிஎப் சாப்டர் 2’. படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.
யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை உலகமே கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தமிழில் வெளியான கேஜிஎப் 2 படத்தில் ராக்கி பாய் ஆக வந்த ஹீரோ யாஷ் பேச்சுக்கு தமிழ் குரல் கொடுத்தவர் டப்பிங் ஆர்டிஸ்ட் சேகர். 150 பேருடைய குரலை சோதித்த பின் இவரது குரல் தேர்வாகியுள்ளது. சென்னை ஹாலிவுட்டின் ஆங்கிரி பேர்ட் படத்தில் வரும் ரெட் பறவைக்கும் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் பாகுபலி பிரபாஸிற்கு இவர்தான் குரல் கொடுத்துள்ளார்.