Categories
தேசிய செய்திகள்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி…. ஒரு நாள் காணிக்கை எவ்வளவு தெரியுமா?…. கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்….!!!!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக  திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற செவ்வாய் கிழமை  முதல் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை கோலாகரமாக பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதற்காக வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் ஜொலிக்கிறது. மேலும் இந்த பிரமோற்சவ விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் ஏழுமலையான் சமேத  ஸ்ரீதேவி ,மூதேவி 4 மாட வீதிகளில்  உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதனை பார்ப்பதற்காக 4 மாட வீதிகளிலும் கட்டுக்கடங்கா கூட்டம் குவியும். இதனால் திருமலையில்  12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே இட வசதி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து தேவஸ்தானம் அதிகாரிகள் கூறியதாவது. பிரம்மோற்சவ விழாவின் போது கார், வேன் உள்ளிட்ட 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. மேலும் கூடுதலாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வாகனங்களை திருப்பதியில் நிறுத்திவிட்டு திருமலைக்கு செல்லும் அரசு பேருந்துகளில் சென்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.

மேலும் வரும்  30-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் இரண்டாம் தேதி இரவு வரை பக்தர்கள் மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதி இல்லை. மேலும் உள்ளூர்களில் இருந்து வரும் பக்தர்களும் பைக்கில் சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் நேற்று மட்டும் 65 ஆயிரத்து 187 பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். 27 ஆயிரத்து 877 முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் 5.37 கோடி உண்டியல் காணிக்கையாக வசூல் ஆகியுள்ளது என கூறியுள்ளனர்.

Categories

Tech |