நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகும் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகவுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் டீஸர் இணையத்தை தெறிக்க விட்டது . இதையடுத்து இந்தப் படத்தில் மலையாள பிரபல நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
![]()
இந்நிலையில் பிரபல நடிகர் பிரபுதேவாவும் ‘விக்ரம்’ படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனும் நடிகர் பிரபுதேவாவும் இணைந்து ‘காதலா காதலா’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .