Categories
சினிமா தமிழ் சினிமா

உலகநாயகனின் தயாரிப்பில் நடிக்கும் பிரபல நடிகர்…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘டான்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு அனுதீப் இயக்கத்தில் தயாராக இருக்கும் SK20 என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது 22-வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் 51-வது படமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் “சில வேலைகள் சந்தோசத்தை தரும், சில வேலைகள் கௌரவத்தையும் பெருமையையும் தரும் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் அனைவருக்குமே பெருமையை தேடித்தரும். தம்பி சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |