அமெரிக்காவின் ஜனாதிபதி பிரபல நாடு குறித்து வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 14-ஆம் தேதி ஆளும் ஜனநாயக கட்சியின் பிரசார குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது. உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான். ஏனென்றால் அந்த நாடு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல் ஆயுதங்களை கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. மேலும் இது குறித்து பிரதமர் கூறியதாவது.
நாங்கள் ஒரு பொறுப்பான அணுசக்தி நாடு மற்றும் நாங்கள் மிகவும் தீவிரமா பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தது. இதனையடுத்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் திறன் மீது நாங்கள் நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.