Categories
உலக செய்திகள்

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன்… இப்படி மாறிவிட்டாரா…? நீங்களே ஆச்சயப்படுவீங்க..!!

உலகிலேயே மிக அதிக உடல் பருமன் கொண்ட சிறுவன் தன் எடையில் பாதிக்கு மேல் குறைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இந்தோனேசியாவை சேர்ந்த Arya Permana என்ற 11 வயது சிறுவன் 190 கிலோ எடை உடையவர். உலகிலேயே அதிக பருமன் உடைய சிறுவன் Arya தான். எனினும் ஆர்யாவிற்கு தற்போது 14 வயதாகும் நிலையில் தன் எடையில் பாதிக்கு மேல் குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். Cipuwasari என்ற கிராமத்தில் வசித்து வரும் Arya தன் உடல் சூட்டை தணிப்பதற்காக தண்ணீர் தொட்டியில் படுத்துக்கிடந்த புகைப்படங்கள் மருத்துவர்களையே அசர செய்தது.

அதாவது Arya நொறுக்குத்தீனிகளை நன்றாக சாப்பிட்டுவிட்டு தண்ணீருக்குள் படுத்து கிடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் உடல் பருமனால் நடக்க முடியாத காரணத்தால் பள்ளி செல்லாமல் இருந்துள்ளார். எனவே Aryaவின் உடல் பருமனைக் குறைப்பதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அவரின் இரைப்பையின் அளவை குறைத்துள்ளனர். இதனால் Arya எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைக்கப்பட்டது.

அதன் பின்பு மூன்று வாரங்களிலேயே Aryaவின் எடை 186.4 கிலோவிலிருந்து 169 ஆக குறைக்கப்பட்டது. அதன் பின்பு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்ததன் மூலம் தன் உடல் எடையை 82 கிலோவாக குறைத்துள்ளார். இதனால் நடக்க முடியாமல் இருந்த ஆர்யா தற்போது மரமேறுகிறார் மற்றும் மோட்டார் சைக்கிள் கூட ஓட்டுகிறார். கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது, தினசரி மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். தற்போது பள்ளி செல்லக்கூட தொடங்கி விட்டார் Arya. ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டுவிட்டன.

Categories

Tech |