Categories
அரசியல்

உலகக்கோப்பை போட்டிகள்: கோடைக் காலத்தில் நடைபெறாதது ஏன்?…. பலரும் அறியாத தகவல்….!!!!

உலகக்கோப்பை போட்டிகள் கோடைக் காலத்தில் நடைபெறாதது எ தற்காக என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். கத்தாரில் பொதுவாக 25 டிகிரி சென்டிகிரேட் (77 டிகிரி பாரன்ஹீட்) ஆக வெப்பநிலை இருக்கும்போது நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 18ம் தேதிக்கு இடையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இறுதிப்போட்டிகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றால், பொதுவாக போட்டிகள் 40 டிகிரி சென்டி கிரேட்டுக்கும் அதிகமாக, 50 டிகிரி சென்டிகிரேட்டை தொடுவதற்கும் சாத்தியம் உள்ள வெப்ப நாட்களில் நடைபெற வேண்டிய நிலை ஏற்படும். துவக்கத்தில் கத்தார், கோடை காலத்தின் போது குளிரூட்டப்பட்ட மூடப்பட்ட மைதானங்களில் உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளை நடத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தது.

இருப்பினும் அந்த திட்டம் ஏற்கப்படவில்லை. வருடத்தின் இறுதியில் உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதால் என்ன சிக்கல்கள்..? இதற்கிடையில் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளானது விறுவிறுப்புடன் காணப்படும்.

பல்வேறு முன்னணிவீரர்கள், கத்தார் 2022 போட்டிகளில் தங்களது நாடுகளுக்காக விளையாட அழைக்கப்படுவர். இங்கிலாந்து பிரிமியர் லீக் உள்ளிட்ட ஐரோப்பிய லீக்போட்டிகள், இத்தாலியின் சீரி ஏ மற்றும் ஸ்பெயினின் லா லிகா போன்றவை சர்வதேச போட்டிகள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே தங்களது சீசன்களை ரத்துசெய்துள்ளது.

Categories

Tech |