Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நாடுகளின் அமைதிக்கு சமர்ப்பணம்…. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரார்த்தனை….!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் தற்போது 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பலரும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து  பிரபல  கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்  போப் பிரான்சிஸ்  கூறியதாவது.

நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி வீரர்கள், ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த நிகழ்வு ஒரு முக்கியமானது. ஏனென்றால் நாடுகளின் சந்திப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு சமர்ப்பணமாக இருக்கும் இந்த போட்டி. இனிவரும் காலங்களில் உலகில் அமைதி நிலவும், அனைத்து மோதல்களும் முடிவுக்கு வரவும் நாம் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |