Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி… அர்ஜென்டினாவுக்கு வாழ்த்து கூறிய பிரான்ஸ் அதிபர்…!!!!!

கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேரில் சென்று கண்டு களித்தார். தன்னுடைய நாட்டு அணி கோல்கள் அடித்தபோது அவர் உற்சாகமாக குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் போட்டி நிறைவு பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும் அதன் வீரர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இறுதி ஆட்டத்தில் தோற்றுப் போனதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம். மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து எம்பாப்பே   உட்பட தோல்வியால் துவண்டு இருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு அவர் ஆறுதல் கூறியுள்ளார். அவர்களிடம் எங்கள் அனைவரையும் நீங்கள் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்அடித்த எம்பாப்பேவின்  ஆட்டம் அசாதாரணமானது எனவும், அவர் ஏற்கனவே இரண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளார் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கத்தாரில் இருந்து இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். மேலும் உலக கோப்பையை பெறும் வாய்ப்பு இழந்த போதிலும் பாரிஸில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்” என மேக்ரான் கூறியுள்ளார்.

Categories

Tech |