Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 இருந்து 12 கோடியாக உயர்த்த வேண்டும் – கனிமொழி

மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 12 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கலந்து  கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மற்றும் ஹைட்ரோகார்பன் குறித்து அவர் கூறியிருப்பதாவது,

“ஹைட்ரோகார்பன் விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம். அது இருக்கக்கூடிய வளத்தை பயன்படுத்தக்கூடிய ஒன்று என்று கூறி அதனை கொண்டுவந்தாலும், அடிப்படையில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்தாலும் கடைசியில் உணவுக்கு விவசாயத்தை தான் நாம் நம்ப வேண்டியிருக்கிறது.அது எந்த மாதிரி வல்லரசான நாடாக இருந்தாலும் நமக்கு விவசாயம் என்பதுதான் அடிப்படை” என்று கூறியிருக்கிறார்.

 

Categories

Tech |