மத்திய பிரதேச மாநிலத்தில் ஜீப் மீது லாரி மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர், தங்களின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றனர். அதன்பிறகு உறவினர் வீட்டு நிகழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று ஜிப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காலை 8 மணி அளவில் சாத்ன மாவட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஜீப் மீது எதிரே வந்து கொண்டிருந்த லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
அந்தக் கொடூர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை மற்றும் 3 பெண்கள் உட்பட 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.