Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு..!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சுந்தரியின் கழுத்தில் அணிந்திருந்த 4fun தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து சுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |