உறவினர் வீட்டில் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு கைதகம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரோன் (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்ற போது சாரோன் யாருக்கும் தெரியாமல் 7 பவுன் தங்க நகையை திருடிவிட்டார். இதுகுறித்து அறிந்த உறவினர் பொதுமக்களின் உதவியோடு சாரோனை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சாரோனை கைது செய்து நகையை மீட்டனர்.