Categories
உலக செய்திகள்

உருமாறிய புதிய கொரோனா…. தடுப்பூசிகள் பலனளிக்கவில்லை…. பிரிட்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவல்….!!

புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் குறித்து பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில  நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது புதிய உருமாற்றத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரிட்டன் East Anglia பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் Paul Hunter புதிய கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் அழியாமல் மீண்டும் புதிய உருமாற்றம் அடைவதால் எதிர்காலத்தில் பாதிப்பு இருக்கும் என்பது இயல்பானது. ஆனால் அவை கடுமையான நோய்களை  உருவாக்குமா என்றும் ஒவ்வொரு புதிய வகை வைரஸ் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நம்மால் கணிக்க  இயலாது என்றும் கூறினார்.

மருத்துவப் பேராசிரியர் Paul Hunter புதிய கொரோனா வைரஸ் மாற்றம் கவலைக்குரியவை அல்ல என்றும் ஆனால் கட்டுப்பாடுகள் கட்டாயம் எனவும் கூறினார். மேலும் புதிய கொரோனா வைரஸ்க்கு தற்போது செலுத்தப்படும் தடுப்பூசி பலனளிக்கவில்லை என்றும் புதிய வைரஸ் மாற்றத்திற்கு ஏற்ப தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.

Categories

Tech |