Categories
தேசிய செய்திகள்

உருமாறிய ஒமிக்கரான் வைரஸ்…. பிரபல நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…..!!

தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியது, “பண்டிகைகள் மற்றும் பிற கொண்டாட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கடைபிடிப்பது அவசியம்.

அதில் கூட்டத்தை தவிர்க்கவேண்டும் மற்றும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் எந்த காரணத்திற்காகவும் பாதுகாப்பு அம்சங்களை விட்டுவிடக்கூடாது. நமது பிராந்தியங்களில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.  உலகின் பிற நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

ஆனால் தற்போது புதிய வகை வைரஸ் உருவாகியது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே தொடர்ந்து வரும் ஆபத்து வைரஸிடம் இருந்து நம்மை பாதுகாக்கவும், அதன் பரவலை தடுக்கவும்  நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். மேலும் நாடுகள் கண்காணிப்பு மற்றும் மரபணு வரிசைப்படுத்தலை அதிகரிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |