Categories
தேசிய செய்திகள்

உரிய பாதுகாப்பு இல்லை…. அடிக்கடி தாக்குதல் நடத்துறாங்க …. கேரளாவை விட்டு வெளியேறிய பிரபலம்….!!!!

சபரிமலை ஐயப்பா சுவாமி கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பெண்ணியச் செயற்பாட்டாளர்களான பிந்து அம்மினி, கனகதுர்கா ஆகிய இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் சபரிமலை சுவாமி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிந்து அம்மினியின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதால் கேரளாவை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம் பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீக்கியது.

இதையடுத்து கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மினி, கனகதுர்கா ஆகிய இரண்டு இளம்பெண்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் சென்று சபரிமலையில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் 2 பேருக்கும் கொலை மிரட்டல் வந்தன. அதனால் 2 பேரும் பல மாதங்களாக தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் பிந்து அம்மினிக்கு எதிராக சமீபத்தில் 2 முறை தாக்குதல் நடந்தது. நேற்று முன்தினம் கோழிக்கோட்டில் வைத்து மீண்டும் அவர் தாக்கப்பட்டார். இதுபற்றி பிந்து அம்மினி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கோழிக்கோட்டை சேர்ந்த மோகன்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மோகன் தாஸும் பிந்து அம்மினி மீது புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, பிந்து அம்மினி கேரளாவில் என் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லாத நிலை உள்ளது. என் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

நான் பெண் என்பதாலும், ஒரு தலித் என்பதாலும்தான் தாக்குதல் நடத்தப்படுகிறது. சங்பரிவார் அமைப்புகள் தான் இதற்கு காரணமாகும். எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கேரள காவல் துறையினர் எனக்கு எந்த பாதுகாப்பும் தரவில்லை. சபரிமலை சென்று வந்த பிறகு தாக்குதல் நடத்துவதால் எனக்கு பக்தர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. என் மீது தாக்குதல் அதிகரித்து வருவதால் கேரளாவில் தொடர்ந்து வாழ முடியாத நிலை உள்ளது. அதனால் கேரளாவை விட்டு வெளியேற நான் தீர்மானித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |