காஞ்சிபுரம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 1,15,15,840 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்தனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி 6,44,97,100 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். இப்பணத்தில் உரிய ஆவணங்களை காண்பித்து 1,15,15,840 ரூபாயை உரியவர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.