Categories
தேசிய செய்திகள்

உரிமையாளருடன் வாக்கிங் சென்ற நாய்…. எதிரே வந்த சிறுவனை கடித்து குதறிய கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஒரு சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கேட்லி பாம் சிங் என்ற கிராமத்தில் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த 13 வயது சிறுவனை பார்த்து திடீரென குரைத்த நாய் உரிமையாளரின் பிடியில் இருந்து நழுவி சிறுவனை கடித்துக் குதறியது.

இதை பார்த்த அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை  நாயிடம் இருந்து தன்னுடைய மகனை மீட்டார். இருப்பினும் சிறுவனை நாய் முகம், காது போன்ற இடங்களில் பலமாக கடித்து விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு சிறுவனை நாய் கொடூரமான முறையில் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |