Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உரம் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”… அதிகாரிகள் எச்சரிக்கை…!!!!!!

வேலூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, பச்சை பயிறு, கம்பு, சாமை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருக்கின்றார்கள். மேலும் பயிர்களுக்கு தேவையான உரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் யூரியா, பொட்டாஷ், டி ஏ பி போன்ற உரங்களை அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலைக்கு விற்றால் உர விற்பனையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிக விலைக்கு உரம் விற்கப்பட்டால் அந்த பகுதி வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெபக்குமார் கூறியுள்ளார்.

Categories

Tech |