Categories
சினிமா தமிழ் சினிமா

உரக்க சொல்லும் படம் மேதகு… நடிகர் சசிகுமார் ட்விட்…!!!

உரக்கச் சொல்லும் படமாக மேதகு திரைப்படம் இருப்பதாக நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது. இந்த படத்தின் கதையை இயக்குனர் தி. கிட்டு எழுதி இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே தயாராகிவிட்ட இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இந்த படம் வெற்றி பெறுவதற்கு அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மேதகு படத்தை பார்த்த நடிகர் சசிகுமார் படக்குழுவிற்கு வாழ்த்து மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ” ஈழத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் படமாக மேதகு படம் உருவாகி இருக்கிறது. ஈழத்தின் மீதான உலகளாவிய நற்பார்வை பெருக இந்த படம் மகத்தான வெற்றி பெறவேண்டும். வெல்வோம்..” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |