உரக்குழியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள எலியார்பத்தி கிராமத்தில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய யோக தார்விக்கா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் தனுஷ்கோடிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனதால் தனுஷ்கோடி தனது குழந்தையை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார்.
அப்போது தோட்டத்தில் உரக்குழிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து தனுஷ்கோடி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.