தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உரக்கிட்டங்கிகளை ஆட்சியர் நேரில் சென்று திடீர் சோதனை செய்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், கொடுவிலார்பட்டி, லட்சுமிரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உரக்கிட்டங்கிகளில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து உரம் இருப்பு விவரங்கள் மற்றும் உரத்தின் விலை போன்ற விவரங்களை விவசாயிகளும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதிவைக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனைதொடர்ந்து அரண்மனைபுதூர், லட்சுமிபுரம், கொவிலார்பட்டி, வடபுதுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கும் செய்து சோதனை செய்துள்ளார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்துலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) மணிகண்ட பிரசன்னா, கூட்டுறவு சார்பதிவாளர் சதீஷ் மற்றும் அரசு அலுவலர்களும் உடனிருந்துள்ளனர்.