Categories
சினிமா தமிழ் சினிமா

உயிர்க்கு” ஆபத்து வெளியான  ட்விட்டர்….இயக்குனர் விளக்கம்……. பதிவு

இயக்குனர் சீனு சாமி அவர்கள் தனது உயிருக்கு           ஆபத்து  இருப்பதாக கூறியது பற்றி விளக்கம்  அளித்துள்ளார். 

இயக்குனர் சீனு சாமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இன்று காலை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விளக்கம் அளிக்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை இயக்குனர் சீனு சாமி சந்தித்துள்ளார்.

800 படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதி நலன் கருதியே நான் கூறினேன். அப்படி நடித்தால் தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என அறிவுறுத்தி இருந்தேன். அனைவரும் சொன்னது போல நானும்  விஜய் சேதுபதியிடம் கோரிக்கை தான் வைத்தேன் அது தவறா?  நான் விஜய் சேதுபதிக்கு  எதிராக நடக்கின்றேன் எனக் கூறி தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எனக்கும் விஜய் சேதுபதிக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக நினைக்கின்றனர். ஆகவே போனிலும் ,வாட்ஸ்அப் மூலமும் தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். இதைப் போன்ற சம்பவங்களை விஜய் சேதுபதி ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் மிரட்டவும் வாய்ப்பு இல்லை. அவர்கள் எனது தம்பிகள் ஆவார்கள்.

மேலும் போலீசிடம் விரிவாக புகார் அளிக்க இருக்கின்றேன். நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால் இதை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன். யார் இது போன்ற செயல்களை செய்து இருக்கிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.

Categories

Tech |