நிவர் புயலின் காரணமாக மின் வயரில் விழுந்த மரக்கிளையை உயிரை பணையம் வைத்து ஊழியர் ஒருவர் அகற்றி உள்ளார்.
நிவர் புயல் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடந்து சென்ற நிலையில் பல கட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. மேலும் மின்கம்பியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.
https://www.dailymotion.com/video/x7xpsog
இதுபோன்று மரக்கிளை ஒன்று மின் கம்பத்தின் மேல் விழுந்ததை மின் ஊழியர் ஒருவர் தன் உயிரை பணையம் வைத்து சாதுர்யமாக அப்புறப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் தன் உயிரை பொருட்படுத்தாமல் அந்தரத்தில் தொங்கியவாறு மரக்கிளையை அகற்றிய மின்வாரிய ஊழியருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.