Categories
உலக செய்திகள்

உயிரை காவு வாங்கிய ஆலங்கட்டி மழை…. பீதியில் இருக்கும் மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!!

ஸ்பெயினின் வட கிழக்கு பகுதியில் கேட்டா லோனியாவில்  ஆலங் கட்டி மழைபெய்ததால் ரோட்டில் நடந்து சென்றவர்கள் பலத்த காயமடைந்தனர். 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த மழையால் 50க்கும் அதிகமானோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படுகிறது. கற்களைப் போன்று விழுந்த ஆலங்கட்டிகளால் வீடுகளின் மேற்கூரைகள், மின்கேபிள்கள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியது. மேலும் ஆலங் கட்டி விழுந்ததில் ஜிரோனா என்ற 20 மாத குழந்தையின் மண்டை உடைந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

இதுபற்றி இசைக் கலைஞர் சிகஸ் கார்பனெல் கூறியதாவது “ஆலங்கட்டி மழை பெய்யும்போது மக்கள் கூச்சலிடவும், ஒளிந்துகொள்ளவும் தொடங்கினர். அதாவது டென்னிஸ் பந்துகள் அளவில் விழுந்த ஆலங்கட்டி மழையால் சாலையில் சென்ற பலர் படுகாயமடைந்தனர். அத்துடன் கார் கண்ணாடிகள் உடைந்தது” என்று கூறினார். அந்நாட்டின் வட கிழக்குப் பகுதியான கேட்டாலோனியாவில் மார்ச் மாதம் ஆலங்கட்டி மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த அளவுக்கு பெரிய ஆலங்கட்டிகள் பலத்த காற்றுடன் தாக்கியது 2002-ம் வருடத்திற்கு பின் இதுவே முதல் முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது மீண்டுமாக ஆலங் கட்டி மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் உள்ளூர்மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

Categories

Tech |