Categories
மாநில செய்திகள்

உயிரை காப்பாற்ற உதவினால்….  ₨. 5 ஆயிரம் பரிசு…. வெளியான அறிவிப்பு….!!!!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாலை விபத்தில் சிக்கி காயமடைவோர், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் நம்மை சாட்சி கோர்ட் என அலைக்கழிப்பார்களோ என பொதுமக்கள் அஞ்சும் சூழ்நிலையில் நமக்கெதற்கு வம்பு என நகர்ந்து விடுகின்றனர். இதனைதொடர்ந்து காவல்துறையினரும் விபத்தில் சிக்கியவர்களை உதவுவதற்கு மக்கள் முன்வர வேண்டும். அப்படி உதவுபவர்களுக்கு எந்த சிக்கலும் வராது என்று காவல்துறையினரும் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் யாரும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு முன்வருவதில்லை. இதனால் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 5 நபர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். பொதுமக்கள் சாலை விபத்து குறித்த தகவலை காவல்துறையினருக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் உதவி செய்து மனித உயிர்களை காப்பாற்ற ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |