உயிரை காக்கும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் தற்போது தடுப்பூசி விலையும் அதிகரிப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் ஒரே நாடு ஒரே கட்சி ஒரே தலைவர் என எப்போதுமே பாஜக ஆராவாரம் செய்கிறது. ஆனால் உயிரை காக்கும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயம் செய்யவில்லை, மத்திய மாநில அரசுகள் என்று பிரிக்காமல் தடுப்பூசிக்கு ஒரே விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.