ஆந்திர மாநிலத்தில் பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசமாமிடி என்னும் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது. அப்போது அவ்வழியில் வந்த ஒருவர் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு உடனடியாக குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. புதைப்பதற்கு முன் குழந்தையை யாரோ தாக்கியுள்ளனர் என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர மிருகத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.