சீனாவில் டிக்டாக்கில் பிரபலமான பெண்ணை அவரது கணவரே எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர் லாமு. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கிராமிய வாழ்க்கை பற்றிய காணொளிகளை இவர் வெளியிடுவதால் தனி ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு உண்டு. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த லாமு விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு குழந்தை லாமுவிடமும் மற்றொரு குழந்தை கணவரிடமும் வளர்ந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் கணவர் அவரை தாக்கும் நோக்கத்துடன் கடந்த 14ஆம் தேதி பெட்ரோல் கேனுடன் சென்றுள்ளார்.
லாமு காணொளி பதிவு செய்து கொண்டிருந்த போது அவரது முன்னாள் கணவர் அங்கு வந்தார். பின்னர் குடும்பத்தினர் முன்னிலையில் லாமுவின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் மதித்தும் 90 சதவீத தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் லாமு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.