Categories
உலக செய்திகள்

உயிருடன் எரிக்கப்பட்ட இலங்கை நாட்டவர்…. இதெல்லாம் ஒரு காரணமா….? பாகிஸ்தானில் பயங்கரம்….!!

பாகிஸ்தானில் இலங்கை நாட்டை சேர்ந்தவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இயங்கிவரும் தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது அலுவலகம் அருகே ஒட்டப்பட்டிருந்த“தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” அமைப்பு போஸ்டரை அவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தொழிற்சாலையில் இருந்த இருவர் பார்த்து அவர்கள் மூலம் செவி வழி செய்தியாக பலருக்கு சென்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் பணியாற்றும் இடத்தில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்று அவரை கொடூரமாக தாக்கி அதே இடத்தில் வைத்து உயிருடன் எரித்துள்ளது. இத்தகைய செயலை செய்தது சம்பந்தப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பயங்கரத்தை குறிப்பிட்டு, “பாகிஸ்தானுக்கு இது அவமானமான நாள்” என பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |