பைக் மேல் ஆசை கொண்ட ஜெர்மனியை சேர்ந்த கிலியன் என்ற ஆறு வயது சிறுவனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது பெற்றோர்கள் பல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தும் அவரை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும்.
இதனால் அவரை உற்சாகப்படுத்தி அதற்காக அவரது பெற்றோர்கள் முப்பது நாற்பது பைக்குகளை வீட்டின் முன் வளம்பெற செய்ய சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்திருந்தது. அந்த சிறுவனுக்காக 15 ஆயிரத்துக்கும் அதிகமான பைக்குகள் வந்து சிறுவனுக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியை அளித்தது. இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றது.