விபத்தினால் காயமடைந்து உயிருக்கு போராடிய மயிலுக்கு தீயணைப்பு படையினர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டியில் குஜிலியம்பாறையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மயில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மயில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குஜிலியம்பாறை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த மயிலை தங்களுடன் மீட்டு முதலுதவிக்காக கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மயில் முழுமையாக குணமடைந்ததும் வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.