Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. அதிர்ச்சியடைந்த தம்பதியினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் சின்னபாண்டி-மாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு விவசாய  கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது.

இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |