மாடியிலிருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டு 3-வது மாடியில் நின்று கொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் கால் தவறி மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரமேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ரமேஷை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.