Categories
தேசிய செய்திகள்

“உயிரிழந்த தந்தையை மீட்கும் முயற்சி”…. 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க துணிந்த பெண்…. பின் நடந்த சம்பவம்….!!!!

உயிரிழந்த தந்தையை மீட்கும் முயற்சியில் பெண் ஒருவர் பிறந்து 2 மாதமே ஆன குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

தென் கிழக்கு டெல்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரின் தந்தை இறந்து விட்டார். இதற்கிடையில் தந்தை மீது பாசம் கொண்ட அந்த பெண்ணிடம், குழந்தை ஒன்றை நரபலி கொடுத்தால் தந்தை உயிர்த்தெழுவார் என ஒருவர் கூறியுள்ளார்.

அந்த ஆலோசனையின் அடிப்படையில் 2 மாத குழந்தை ஒன்றை அப்பெண் கடத்தியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அந்த பெண் தன் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு முன்பு குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதனிடையில் குற்றம் சாட்டப்பட்டவர் நரபலிக்கு முயற்சித்ததை ஒப்புக் கொண்டார்.

Categories

Tech |